Words |
English |
Tamil |
German |
Time |
locution
|
கூற்று (சொற்றொடர்மூலம்
வெளிப்படும் மொழியின் அடிப்படை
அர்த்த அலகு) |
| 26.08.2010, 19:37 |
theory
|
கோட்பாடு (தகவல்களை
ஒருங்கிணைத்து உருவாக்கப்படும்
பொது ஊகம் அல்லது கருத்து) | | 26.08.2010, 19:36 |
collective unconscious
|
கூட்டு நனவிலி (ஒரு மக்கள் கூட்டம்
பொதுவாகக் கொண்டுள்ள நனவிலி) |
| 26.08.2010, 19:35 |
theoretical break
|
கோட்பாட்டொறுத்தல் (கோட்பாடு
சார்ந்த அணுகுமுறையில் இருந்து
துண்டித்துக்கொள்ளுதல்) | | 26.08.2010, 19:34 |
logocentrism
|
சொல்மையவாதம் (சொல்லை
சிந்தனையின் அடிப்படை அலகாகக்
கொள்ளும் ஒரு சிந்தனை முறை) |
| 26.08.2010, 19:31 |
etymology
|
சொல்பிறப்பியல் (சொற்களின்
வேர்களையும் உருவாக்க
முறைகளையும் ஆராயும்
மொழியியல் பிரிவு) | | 26.08.2010, 19:30 |
discourse
|
சொற்களன் (கருத்துப் பரிமாற்றம்
நிகழும் மொழிச்சூழல் அல்லது
பண்பாட்டுச்சூழல்) |
| 26.08.2010, 19:18 |
versification
|
செய்யுளாக்கம் (ஒரு கூற்றை
யாப்பின் விதிகலுக்கு உட்பட்டு
அமைத்தல்) | | 26.08.2010, 19:18 |
discourse
|
சொல்லாடல் (மொழியில் அர்த்தத்தை
கொடுப்பதும் கொள்வதுமாக நிகழும்
பரிமாற்றம் அல்லது உரையாடல்) |
| 26.08.2010, 19:16 |
free verse
|
சுதந்திர கவிதை (யாப்பற்ற கவிதை) | | 26.08.2010, 19:14 |
narrator
|
சொல்லி (கதையைச் சொல்பவன்.
கதைக்குள் இவன் வரலாம்
வராமலும் இருக்கலாம்) |
| 26.08.2010, 19:13 |
catharsis
|
சுத்திகரணம் (படைப்பின் துயரத்தை
தானும் அனுபவிக்கும் வாசகன்
அடையும் மன மேம்பாடு) | | 26.08.2010, 19:13 |
deconstruction
|
தகர்ப்பமைப்பு (படைப்பை வாசகன்
குறிகளாக உடைத்து தனக்குரிய
படைப்பை உருவாக்கி
பொருள்கொள்ளும் |
| 26.08.2010, 19:12 |
subject
|
தன்னிலை (மொழியில் உருவாகும்
தான் என்னும் நிலைபாடு) | | 26.08.2010, 19:08 |
logic
|
தர்க்கம் (ஒரு கருத்திலிருந்து
இன்னொன்றை உருவாக்கும் செயல்) |
| 26.08.2010, 19:07 |
vision
|
தரிசனம் (ஒட்டுமொத்த நோக்கு.
சாராம்ச நோக்கு) | | 26.08.2010, 19:05 |
apology
|
தன்னிலையுரை (தன் தரப்பை
விளக்கிச் சொல்லும் உரை) |
| 26.08.2010, 19:04 |
auto biography
|
தன்வரலாறு (தன் வாழ்க்கையை
தானே சொல்லும் நூல்) | | 26.08.2010, 19:03 |
soliloquy
|
தனிமையுரை (தனித்திருக்கும்
கதாபாத்திரம் தானே
உரையாடிக்கொள்வது) |
| 26.08.2010, 19:02 |
ego
|
தன்முனைப்பு (தன் சிந்தனைகளை
அடிப்படையாகக் கொண்டு
அனைத்தையும் காணும் நிலை) | | 26.08.2010, 19:01 |
Individualism
|
தனிமனிதவாதம் (தனிமனிதனை
அடிப்படையாகக் கொண்டு
அனைத்தையும் அணுகும்
உருவாக்கும் முறை) |
| 26.08.2010, 18:59 |
Cliche
|
தேய்வழக்கு
(பழக்கத்தால் பொருளிழந்துபோன
சொல்லாட்சி) | | 26.08.2010, 18:58 |
Triteness
|
தேய்நடை
(பழக்கத்தால் பொருளிழந்துபோன
நடை) |
| 26.08.2010, 18:57 |
concrete
|
திண்மம்
(புறவயமான திட்டவட்டமான ஒன்று) | | 26.08.2010, 18:57 |
communication
|
தொடர்புறுத்தல்
(பொருளை முன்வைப்பவன்
பெறுபவனிடம் கொள்ளும் தொடர்பு) |
| 26.08.2010, 18:56 |
Pamphlet
|
துண்டுப்பிரசுரம்
(தனியாக அச்சிட்டு
வினியோகிக்கப்படும் சிறிய கட்டுரை) | | 26.08.2010, 18:54 |
Tragedy
|
துன்பியல்
(துன்பத்தில் முழுமைகொள்ளும்
கலை நோக்கு) |
| 26.08.2010, 18:53 |
Myth
|
புராணிகம் (தொன்றுதொட்டு
வழங்கிவரும் கதை அல்லது
நம்பிக்கை) | | 26.08.2010, 16:02 |
Grand Narrative
|
பெருங்கதையாடல் (ஒட்டுமொத்த
சமூகத்தையும் தழுவியபடி
உருவாக்கப்படும் புனைவுகள்) |
| 26.08.2010, 16:01 |
Parole
|
புறமொழி (பேசும்போது நாம் புறத்தே
கேட்டு புரிந்துகொள்ளும் மொழி) | | 26.08.2010, 15:57 |
Other
|
பிறன்(தன்னை ஒரு இருப்பாக
உணரும் ஒருவன் அறியும் மற்றவர்) |
| 26.08.2010, 15:55 |
Split personality
|
பிளவாளுமை(ஒரு மனிதன் மன
அளவில் இரு மனிதர்களாகப்
பிளவுறும் உளச்சிக்கல்) | | 26.08.2010, 15:52 |
Humanism
|
மனிதாபிமானம்
(மனிதன் மீதான அன்பிலிருந்து
உருவாகும் உலகநோக்கு) |
| 26.08.2010, 15:49 |
values
|
மதிப்பீடுகள்
(சமூகம் முக்கியமாக கருதும்
நடத்தைமுறைகள்) | | 26.08.2010, 15:48 |
Fantasy
|
மிகுபுனைவு(கற்பனை மூலம்
உருவாக்கப்பட்ட கனவுச்சாயல்
கொண்ட புனைவுமுறை) |
| 26.08.2010, 15:48 |
Irony
|
முரண்நகை
(முரண்பாட்டின் மூலம் உருவாகும்
நகைச்சுவை. அதிகமும்
விமரிசனத்தன்மை கொண்டது) | | 26.08.2010, 15:45 |
Paradox
|
முரண்பாடு
(ஒன்றுக்கொன்று முரண்படும்
கருத்துக்கள் அல்லது உண்மைகள்) |
| 26.08.2010, 15:44 |
Depression
|
மனத்தளர்வு
(மனச்சோர்வு மூல உருவாகும்
செயலின்மை) | | 26.08.2010, 15:43 |
Methodology
|
முறைமை(கருத்துக்களை
உருவாக்கவும் பரிசீலிக்கவும்
கடைப்பிடிக்கப்படும் வழிமுறை) |
| 26.08.2010, 15:43 |
Motif
|
மூலக்கருத்து
(ஒரு சிந்தனைக்கு அடிப்படையாக
உள்ள முதல் கருத்து) | | 26.08.2010, 15:40 |
Seite: 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 >> 38 |